நீதிக்கு முன் அனைவரும் சமம் என தேனியில் சட்டக்கல்லூரியை திறந்து வைத்த பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தேனியில் சட்டக்கல்லூரியை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து பேசியதாவது:-
இங்கு சட்டக்கல்லூரி அமைய முழு முயற்சி எடுத்தது சட்டத்துறை அமைச்சர் சண்முகம்தான். இதற்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனி மனிதருக்காக சட்டம் இல்லை. சட்டத்தின் வழியாகவே நிர்வாகம் நடைபெற வேண்டும் என கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். சட்டத்தின் ஆட்சியில் எதேச்சதிகாரம், சர்வாதிகார போக்கு ஆகியவற்றுக்கு இடம் இல்லை. நீதிக்கு முன்பு அனைவரும் சமம்.
இவ்வாறு அவர் பேசினார்.