மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.
கடந்த 27ம் தேதி இரவு இந்த பாரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.