பழனி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை சோதனை

290 0

பழனி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர்.

சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தம் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

கிரிவீதி பகுதியில் ஏராளமான பஞ்சாமிர்த கடைகள் உள்ளன. இவர்களுக்கென தனியாக தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் சில கடைகளுக்கு இன்று அதிகாலை 10-க்கும் மேற்பட்ட கார்களில் வருமானவரித்துறையை சேர்ந்த 40 அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருகின்றனர். இந்த கடையினர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டார்களா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.