சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டே நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் – இராதாகிருஸ்ணன்

253 0

சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் இதனை நினைவில் வைத்து பெரும்பானமையினார் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட அசாம்பாவிதம் காரணமாக இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்னர்.

அவர்களுக்கு சகல துறைசார்ந்த விடயங்களிலும் பின்னடைவு ஏற்பட்டு வருகின்றது. இதனை அனுதிக்க முடியாது. இந்நிலை தொடருமாயின் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தனமை ஏற்படும் இதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையாக வாழும் மக்கள். இவர்களை இனைத்துக் கொண்டு தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை உணர்ந்துக் கொண்டு பெருபான்மை மக்கள் செயற்பட வேண்டும்.

தற்போது இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. இதற்கு எங்களின் ஒத்துழைப்பு அவசியம். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று பெரும்பான்மை கட்சிகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதில் இரண்டு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டது. ஐ.தே.கட்சி இன்னும் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யவில்லை” என கூறினார்.