யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று போராட்டம் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, பல்கலைக்கழக வளாக முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கமைய பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டும், கொலையை விபத்தாகக் காட்ட முனைந்தமைக்காக பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதமொன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.