மாணவர்களின் நடைபவணி வவுனியாவைச் சென்றடைந்தது

314 0

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி வவுனியாவை சென்றடைந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த ஜனாதிபதி சாரணர்களான துசாந்தன் மற்றும் சஞ்சீவன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நடைபவனியை ஆரம்பித்திருந்தனர்.

அந்தவகையில், பருத்துறையில் இருந்து தெய்வேந்திர முனைவரை தொடரவுள்ள இந்த நடைபவனி இன்று (திங்கட்கிழமை) வவுனியாவை சென்றடைந்தது.

வவுனியாவை சென்றடைந்த குறித்த இருவரையும் நகரசபை உறுப்பினர் காண்டீபன், தமிழ்விருட்சம் அமைப்பைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார், சபாநாதன் ஆகியோர் வரவேற்றதுடன் அவர்களுக்கான கௌரவத்தினையும் வழங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் பருத்திதுறையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி எதிர்வரும் 4 ஆம் திகதி தெய்வேந்திர முனையில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.