ஐக்கிய தேசிய கட்சி தற்போது அனாதையாகியுள்ளது-ரோஹித

237 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சாராத வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐ.தே.க தற்போது அனாதையாகியுள்ளதாகவும் அந்த கட்சி அருவறுக்கதக்க ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது உடைந்த கட்சியை மீண்டும் வெல்டிங் செய்து பொருத்தி அந்த கட்சி நேற்றிரவு மீண்டுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த கலந்துரையாடலில் புதிய யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதாவது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.தே.கவின் வேட்பாளராக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினர் பதவியல் இருந்து விலக வேண்டும் என்பதே அந்த யோசனை.

அதாவது அவர் ஒரு பாகுபாடற்ற தேசியத் தலைவராக இருக்க வேண்டுமாம்.

தற்போது இவர்கள் பாகுபாடற்ற ஒரு தயாரிப்பை அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.