6 மாத காலத்­திற்குள் 264 பேர் கைது

227 0

மது­வரித் திணைக்­க­ளத்தின் கல்­முனை பிராந்­திய அலு­வ­லகம் கடந்த ஆறு­மாத காலத்­திற்குள் மேற்­கொண்ட திடீர் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­களில் ஹெரோயின், கேரள கஞ்சா, சட்டவிரோத மது­பானம் என்­ப­னவற்றை விற்­பனை செய்த குற்­றத்­திற்­காக 264 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு கைதா­ன­வர்கள் கல்­முனை, சம்­மாந்­துறை, அக்­க­ரைப்­பற்று ஆகிய நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­பட்டு இவர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கல்­முனை பிராந்­திய அலு­வ­லக பொறுப்­பா­ளரும் பிர­தான பரி­சோ­த­கரு­மான சண்­முகம் தங்­க­ராஜா தெரி­வித்தார்.

இவ்­வாறு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களில் ஹெரோயின் வைத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் அதி­க­ள­வான வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அட்­டா­ளைச்­சேனை, அக்­க­ரைப்­பற்று ஆகிய பிர­தே­சங்­களில் ஹெரோயின் மற்றும் கேரளக் கஞ்சா என்பனவற்றை வைத்திருந்த நபர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.