11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் கரன்சி மதிப்பு சரிவு

395 0

சீனாவின் கரன்சி மதிப்பானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதுடன், அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறது. இதனால் சீன வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது.

இந்த வர்த்தக போர் தீவிரமடைந்த நிலையில், சீனாவின் கரன்சி (யுவான்) மதிப்பு வீழ்ச்சி அடைய தொடங்கியது.
வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சீனப் பொருட்கள் புதிய வரிகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சீனாவின் வர்த்தகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், கரன்சி மதிப்பில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆசிய சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் கரன்சி (யென்) மதிப்பு மேலும் சரிந்து 7.1487 என்ற அளவில் இருந்தது. இந்த சரிவு, 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வீழ்ச்சியாகும்.