உலகில் உள்ள மர்மங்களில் முக்கியமான கூறப்படும் பேர்முடா முக்கோணம் குறித்த மர்மம் தீர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்திலாந்திக் சமுத்திரத்தின் பேர்முடா, ஃப்ளோரிடா மற்றும் போர்ட்டோ ரிகோ ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் 5 லட்சம் சதுர மைல் கடற்பரப்பு பேர்முடா முக்கோணம் எனப்படுகிறது.
இந்த பகுதி ஊடாக பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் கடலுக்குள் ஈர்க்கப்பட்டு காணாமல் போய்விடுவதாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக நீண்டகாலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்த போதும், இந்த மர்மம் தீர்க்கப்படவில்லை.
அதேநேரம் இவ்வாறு இந்த பகுதியை கடந்து செல்லும் அனைத்துமே ஈர்த்து காணாமல் போய்விடும் என்ற வாதம் மறுக்கப்பட்டும் வந்துள்ளது.
இது குறித்து கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட ஆய்வில் பழங்கால கப்பல்கள் சிலவும் மீட்கப்பட்டிருந்த போதும், இவ்வாறு இந்த பகுதியில் அதிக விபத்துகள் இடம்பெறுகின்றமைக்கான காரணம் கண்டறியப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது விளக்கமளித்த நிபுணர்கள், குறித்த முக்கோணப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் மஞ்சமிடுகின்ற மேகங்கள், சில தருணங்களில் ஆறு கோணங்களை உடையதாக தோற்றம் பேறுகின்றன.
இந்த அறுகோண மேகங்கள் ‘எயார்போம்ப்’ எனப்படும் வான் குண்டுகளை வெடிக்கச் செய்வதாகவும், அவை பேர்முடா முக்கோணக் கடற்பிரதேசத்தில் வீழும் போது ஏற்படுகின்ற அசாதாரண காலநிலையால் விமானங்களும், கப்பல்களும் கடலினுள் ஈர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ரெண்டி கேர்வெனி இதனைத் தெரிவித்துள்ளார்.