ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகன், தமது விடுதலை தொடர்பில் இந்திய தேசிய மகளிர் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த கொலை வழக்கில் மரண தண்டனைவிதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
எனினும் 25 வருடங்களுக்கு மேலாக அவர் சிறைதண்டனையை அனுபவித்துள்ள போதும், இன்னும் விடுவிக்கப்படவில்லை.
அவரது விடுதலைக்காக தமிழக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும், மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பால் தடைபட்டுள்ளது.
மேலும் தமது விடுதலைக்காக அவர் முன்வைத்த பல்வேறு மேன்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர் தற்போது இந்திய தேசிய மகளிர் ஆணைக்குழுவிற்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.