இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மற்றும் மொழியின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை அறிந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் இல்லை.
முன்னர் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் பேச முயற்சித்தாலும், அது அரசியல் லாபத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது.
தமிழ் மொழியை அறியாத அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் அபிலாசைகள் உரிமைகள் மற்றும் நிலைமைகளை புரிந்துக் கொண்டவர்களாகவும் இருப்பதில்லை.
இதனாலேயே இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் நீண்டுச் செல்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.