இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான முக்கிய சந்திப்புகள் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கரின் தலைமையில், முக்கிய வர்த்தக பிரதிநிதிகள் குழுஒன்று கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரச முக்கியஸ்தர்களை சந்தித்துள்ளது.
அத்துடன் தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகளையும் இந்த குழு சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.