சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் பணியாளர்கள் சிலர் கென்யாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாம் கடற்கொள்ளையர்களின் பிடியில் நடைப்பிணங்களாக இருந்ததாக விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு கடலில் வைத்து 26 கப்பல் பணியாளர்களுடன் கைப்பப்பற்றிய கப்பலை சோமாலிய கொள்ளையர்கள்,சோமாலியாவுக்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் கப்பலின் உரிமை நிறுவனம் பெருந்தொகை பணத்தை செலுத்திப்பின்னரே தடுத்துவைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்கள், சீனா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் தாய்வான் நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
தமக்கு கடற்கொள்ளையர்கள் உரிய உணவு மற்றும் குடிநீரை தரவில்லை என்றும் பசி ஏற்பட்டபோது எலிகளை உட்கொண்டதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.