சென்னையில் பழங்கள் விலை கடும் உயர்வு

338 0

சென்னையில் பற்றாக்குறை காரணமாக அனைத்து பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

வெளிநாட்டு ஆப்பிள் வாஷிங்டன், ராயல்கலா இதற்கு முன்பு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது. இப்போது கிலோ ரூ.300-க்கு விலை உயர்ந்து விட்டது. இமாச்சலபிரதேசத்தில் இருந்து வரும் உள்நாட்டு ஆப்பிள் கிலோ ரூ.100-க்கு கிடைக்கிறது.

ஆரஞ்சு பழம் (மால்ட்டா ரகம்) ரூ.100-ல் இருந்து ரூ.180-க்கு விலை உயர்ந்து விட்டது.

கடந்த வாரம் கொய்யாப் பழம் கிலோ ரூ.30 அல்லது 40 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் இப்போது கிலோ ரூ.70-க்கு விலை உயர்ந்து விட்டது. ஆந்திராவில் இருந்து வரும் கொய்யா ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

வாழைப்பழம் அனைத்தும் கிலோவுக்கு 20 ரூபாய் கூடி உள்ளது. பூவன் ரூ.30-ல் இருந்து ரூ.50, ஏலக்கி ரூ.80-ல் இருந்து ரூ.100, செவ்வாழை ரூ.60-ல் இருந்து ரூ.80, கற்பூரவள்ளி ரூ. 70-ல் இருந்து ரூ.80, நாட்டுப்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்து விட்டது.

பப்பாளி இதற்கு முன்பு 1 கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது. இப்போது கிலோ ரூ.50க்கு உயர்ந்துள்ளது. சப்போட்டா பழம் ரூ.30-ல் இருந்து ரூ.80-க்கு விலை உயர்ந்து விட்டது.

சாத்துக்குடி பழம் ரூ.80-ல் இருந்து ரூ.100-க்கும், நாட்டு நெல்லிக்காய் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.150-க்கும் விலை உயர்ந்துள்ளது. 2 ரூபாய்க்கு விற்ற 1 எலுமிச்சம் பழம் இப்போது 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விலை உயர்வு பற்றி அயனாவரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரி சாமுவேல் கூறுகையில், பற்றாக்குறை காரணமாக அனைத்து பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் இந்த மாதம் முகூர்த்த நிகழ்ச்சிகள், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் பழங்கள் விலை மேலும் உயர்ந்து விடும்” என்றார்.