புதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ – யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு புதையல் தோண்டுவதற்கு பயண்படுத்திய ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு , கெப் ரக வாகனம் ஒன்றும் , சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் புத்தளம் , மதவாச்சி , மதுரங்குளி , ஆராச்சிக்கட்டு மற்றும் இராஜாங்கனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையின் பின் தெரியவந்துள்ளது.