திஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

380 0

எவன்காட் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலான பாலித பெர்னாண்டோ மற்றும் கருணாரத்ன பண்டார அதிகாரி எகொடவெலவுடன், ரக்னாலங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவும் கைது செய்யப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.