தனது கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கூட்டம் ஒன்று நேற்று (22) நடைபெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 7 சதவீதமான குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.