பேரூந்துக்கள் மீது கல்வீச்சு நடாத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் எச்சரிக்கை

582 0

K800_IMG_7392நேற்றய தினம் செவ்வாய் 28-06-2016 யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் குறித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும்இ இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை எமது மாகாணத்தில் உள்ள ஒருசிலரே செய்கின்றார்கள் என்றால் எமது இனம் எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை எனவும், இது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செயலாகவே இருக்கிறது என்றும் தெரிவித்ததோடு.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்கள் எமது மாகாணத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும், பதுங்கியிருந்து கல்வீச்சுக்களை செய்துவிட்டு தலைமறைவாகுவது ஒரு கோழையின் செயற்பாடு எனவும்மு துகெலும்புள்ளவர்களாக இருந்தாலோ அல்லது தங்களது பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் நேருக்கு நேர் நின்று நியாயமான முறையிலே அதனை அடைய முற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதோடு,

இவ்வாறான சம்பவங்களில் காயப்படுத்தப்படுகின்றவர்கள் உங்களது தந்தை, தாய், மனைவி, அல்லது பிள்ளைகளெனில் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எனவும்இ திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கூற்றுக்கு அமைவாக இதனோடு தொடர்புபடுகின்றவர்கள் சற்று தூர நோக்கோடு சிந்தித்துச் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு தற்போது இ.போ.ச மற்றும் தனியார் துறையினருக்கிடையில் ஓர் சுமூகமான உறவு ஏற்படும் இத்தறுவாயில் இதனைக் குழப்பவேண்டும் என்று ஒரு சிலர் திட்டமிட்டு செயற்படுவதாகவே உணர முடிகின்றது என்றும், இத்தும்மட்டில் காவல்த்துறையினர் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும், குறித்த சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை பல கோணங்களிலும் நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment