அரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் – தினேஷ்

215 0

நாட்டின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும்  அரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஏற்றவகையிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். எமது திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் 23 தனியார் வங்கிகள்  இயங்குவதுடன் 3 அரச வங்கிகள் இயங்குகின்றன. மக்கள் வங்கி , இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியனவே நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான பலத்தை வழங்கும் வங்கிகளாக இருக்கின்றன.

இந்த வங்கிகளை பாதுகாக்க வேண்டும். இலாபத்தை அதிகரிப்பதற்கான பிரதான வங்கியாக மக்கள் வங்கி இருக்கின்றது. அரச மற்றும் தனியார் துறையின் அபிவிருத்திக்கா பங்களிக்கும் வங்கியாகவே இது இருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் தற்போது கொண்டுவந்திருக்கும் சட்ட திருத்தத்தில் மக்கள் வங்கியின் பாதுகாப்பு சரத்துக்களை இல்லாமலாக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.