ஸ்ரீலங்­க­னுக்கு 24000 கோடி ரூபா நஷ்டம் சுட்­டிக்­காட்­டு­கி­றது-கோப்­குழு

323 0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வ­னத்­துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேல­தி­க­மாக அரசு வங்­கிகள்,இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­க­ளுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம்  கட­னாக செலுத்த வேண்டி உள்­ள­தெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்­பெ­னியின் விமா­னங்­களை மீள் தொகு­திப்­ப­டுத்­து­தலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட A 350-900 ரக 8 விமா­னங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையை முடி­வு­றுத்தல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யி­லேயே இவ்­வி­பரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

தாபனம் சார் முகா­மைத்­துவ பல­வீ­னங்­க­ளினால் மட்­டு­மன்றி அர­சியல் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளினால் புரி­யப்­பட்ட அர­சியல் தலை­யீ­டு­க­ளி­னா­லேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்­பெனி பாரிய நஷ்­டத்தை சந்­தித்­துள்­ளது. ஆகவே  இத்­த­கைய நஷ்­டத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் வர­வ­ழைத்து அவர்­க­ளுக்­கான  தண்­ட­னையை  வழங்க  உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)  இந்த விசா­ரணை அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அத்­துடன் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யின்றி முறை­யான செல­வுப்­ப­குப்­பாய்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் 14 நவீன விமா­னங்கள் 8 வருட காலப்­ப­கு­திக்குள் விமா­னத்­தொ­கு­தியில் சேர்ப்­ப­தற்கு நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் மேற்­கொண்ட தீர்­மா­ன­மா­னது தமது அதி­கா­ரத்­தி­ணைக்­க­டந்து மேற்­கொண்­ட­தொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.