எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உற்பத்திசெய்ய வேண்டும்! – இஷாக் ரஹ்மான்

271 0

இனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய எமது தொழிற்சாலைகளை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் டொலரின் விலைக்கேற்ற வகையிலே நாங்களும் செயற்படவேண்டிவரும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் மருந்துகளின் விலைகுறைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே மருந்து வகைகளில் விலை பாரியளவில் குறைக்கப்பட்டன. அப்போது யாரும் அதுதொடர்பில் பேசவில்லை. ஆனால் தற்போது டொலரின் விலையேற்றம் காரணமாக சில மருந்துகளில் விலை 14வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இது அரசாங்கத்தின் தவறினால் இடம்பெற்றதொன்றல்ல. இவ்வாறான பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவேண்டுமென்றால் மருந்துவகைகளை நாங்கள் உட்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எமது நாட்டிலும் இன,மதவாதிகளுக்கு இடமளிக்காமல் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் நாங்கள் டொலரின் விலை ஏற்றத்துக்கு ஏற்பவே செயற்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதற்காக எதிர்காலத்தில் தகுதியான அரச தலைவர் ஒருவரை நாங்கள் தெரிவுசெய்துகொள்ளவேண்டும் என்றார்.