முக்கிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டி நாடளாவிய ரீதியில் போராட்டம்!

368 0

ahm-azwer-640x430வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மௌனமாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சம்பந்தனாதற்போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுவதுஎன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நக்கலாக கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது மௌனமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பிற்காக தற்போது ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றது.

ஜெருசேலத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை சிரியா கைப்பற்றியுள்ளது. குறித்த பள்ளியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று யுனெஸ்கோ முன்வைத்துள்ள பிரேரணை குறிப்பிடுகின்றது.

அதற்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தன. ஆனால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

மேலும் ஐ.நாவின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் இலங்கை வந்திருந்த போது அவரை சந்திக்க முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு பக்கசார்பு இடம் பெற்று வருகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் சரத்பொன்சேகா, பாட்டலி, மங்கள சமரவீர, போன்றோர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் மங்கள சமரவீரவிற்கு எதிராகவும் எதிர் வரும் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாகவும் அஸ்வர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.