கல்பிட்டி குடாவ பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மணல் கடத்தப்பட்ட லொறியையும், கடத்தப்பட்ட 2 கியூப் மணலையும் கடற்படையினர் கைபற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைபற்றப்பட்ட மணலையும் கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணலை குவித்து வைத்தல், மணல் கடத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் தொடர்சியான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் சுற்றாடலை பாதுகாக்கும் தேசிய கொள்கைக்கு பங்களிப்பு வழங்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.