இந்தோனேசியாவில் நிர்கதியாகி இருக்கின்ற ஈழ அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இருந்து 44 அகதிகள் அவுஸ்திNலியா நோக்கி சென்ற படகு பழுதடைந்த நிலையில் அவர்கள் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் நிர்கதியாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் அச்சே மாகாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையினர் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியாவை நோக்கிய பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டாம் என்று, அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குறித்த அகதிகளை இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ நாடுகடத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.