அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
3 இலட்சம் ரூபா சரீர பிணையில் அவரை விடுதலை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபருக்கு 1 வருட சிறைத்தண்டனை மற்றும் 50000 ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தத.
பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக பிரதிவாதி சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்ததை அடுத்த அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.