ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

220 0

அமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஐ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டெரெசை நாளை சந்திக்க உள்ளார்.

நியூயார்க் நகரில் நாளை மாலை 3 மணி அளவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தின் இடையே ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை சந்தித்து பேச உள்ளார்.
“ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பில் உலக அமைதி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் பற்றி பேச உள்ளனர். இந்நிகழ்வில், ஐ.நா பொது செயலருடன் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை பற்றியும் விவாதிக்க உள்ளேன்” என மைக் பாம்பியோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மைக் பாம்பியொ நாளை செர்பிய அதிபர் அலெக்சாண்டரையும் சந்திக்க உள்ளார் என அமெரிக்கா அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.