ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐதேக விடம் காட்டி கொடுக்க சிலர் முயற்சி-எஸ்.பி

226 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டி கொடுப்பதற்கு இன்றும் சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சி மற்றைய கட்சியொன்றின் நிழலில் இருக்க போவது இல்லை எனவும், ஆனால் அமையவுள்ள கூட்டணியின் தலைமை பதவி பொதுஜன முன்னணிக்கு உரித்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் உரிமை பொதுஜன முன்னணிக்கு உள்ளதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கூட்டமைப்பை சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிப்பதாகவும் ஆனால் அவர்களால் அதனை செய்ய முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.