யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும் அதற்கு நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கள மாணவர்கள் ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.