மஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்- சந்­தி­ராணி

310 0

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை நீக்­காமல்  அவரை ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்தது நகைப்­புக்­கு­ரி­ய­தா­கவே உள்­ளது. இது மக்­களின் கண்­களை மூடும் செயற்­பா­டாகும். மஹிந்த ராஜ­பக் ஷ முழு நாட்­டையும் ஏமாற்ற முயற்­சிப்­ப­தாக அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார குற்றம் சாட்­டினார்.

அநூ­ரா­த­பு­ரத்தில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு  குறிப்­பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும்  குறிப்­ பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்சி தமது பணி­களை முறை­யாக முன்­னெ­டுத்து வரு­கி­றது. அதற்­க­மைய ஜனா­தி­பதி  வேட்­பா­ளரை தற்­போதே அறி­விப்­ப­தற்­கான எந்த அவ­சி­யமும் கிடை­யாது. தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு இன்னும் காலமும் காணப்­ப­டு­கி­றது. ஆகவே கட்­சியின் ஒழுங்கு விதி­க­ளுக்கு அமைய செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழு ஆகியன ஒன்­றி­ணைந்து முறை­யாக வேட்­பா­ளரை அறி­விப்போம்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ நாடு ­பூ­ரா­கவும் வலம்­வ­ரு­வதால் எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை.

இது­வ­ரையில் தேர்­த­லுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அந்த கட்­சியின் வேட்­பா­ள­ராக அறி­வித்­தி­ருந்­தாலும், அவரின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை இன்னும் நீக்­கப்­பட வில்லை.

நாட்டின் குடி­யு­ரிமை இல்­லாத ஒருவர் எவ்­வாறு நாட்டின்  ஜனா­தி­ப­தி­யாக முடியும். இது நகைப்­புக்­கு­ரிய விட­ய­மாகும். மக்­களின் கண்­களை மூடும் செயற்பாடாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முழு நாட்டையும் ஏமாற்றும் வகையிலேயே செயற் பட்டு வருகிறார். ஆகையால்  நாங் கள் குழப்பமடைவதற்கான எந்தத் தேவையும் இல்லை எனத் தெரி வித்தார்.