நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

360 0

img_3805பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாண வர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜிவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,இறந்த இரு மாணவர்களுக்கும்   நட்டஈடு வழங்கப்பட வேண்டும், சிறுவயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்பட்ட செலவையும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவ்விரு பெற்றோர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் வழங்க வேண்டும்.

மாணவி வித்தியா கொலை வழக்கிற்கு நீதி கிடைக்காதது போல் எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் போவதை தவிர்க்க வேண்டும். அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்காதுவிடின் வேறு வடிவங்களில் போராட்டம் திசை திருப்ப ப்படும்.

எமது மாணவர்கள் இப்போதும் கொந்தளிப்புடனேயே உள்ளனர்.  கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவருடைய உரையை சிங்கள மொழியில் சட்ட பீட மாணவன் சாமர, ஆங்கிலத்தில் மருத்துவ பீட மாணவ ஓன்றியத் தலைவர் ஏ.அலெக்ஸ் ஆகியோர் வாசித்தனர்.