மட்டக்குளியில் நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைவஸ்து விற்பனை தொடர்பில் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மட்டக்குளிய – சமித்புர பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 4 பேர் மரணித்தனர். இதன்போது படுகாயமடைந்த மேலும் இருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியிலேயே நால்வர் மரணித்திருந்தாக தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்தார்.
போதைப் பொருள் கும்பல்களுக்கிடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘குடு ரொஷான்’ என்பவர் தலமைதாங்கிய கும்பலே தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ‘சூட்டி உக்குவா’ மற்றும் அவரது கூட்டாளிகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் ஈடுபட்டவர்கள் 24- 29 வயதுக்கிடைப்பட்டவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
தாக்குதல் நடத்திய தரப்பு தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் மட்டக்குளிய – சமிட்புர பிரதேசத்தில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அதில் 4 பேர் உயிரிழந்து விட்டதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
மற்றைய இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.