முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக திகழும் கேரளா

317 0

201610241051483100_elderly-people-which-is-living-in-kerala_secvpfகேரள மக்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 71.9 சதவீதம் பேரும் பெண்கள் 68.3 சதவீதம் பேரும் கேரளாவில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் கேரளாவில் தான் வசிக்கிறார்கள்.

கேரள மாநிலம் இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரசித்திபெற்ற கேரள மாநிலத்தில் ஏராளமான நவீன வசதிகள் கொண்ட பெரிய ஆஸ்பத்திரிகளும் உள்ளன. இதனால் வெளி மாநிலத்தில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் வசிக்கும் மாநிலம் கேரளா என்பது தெரியவந்துள்ளது.தற்போது கேரள மக்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 71.9 சதவீதம் பேரும் பெண்கள் 68.3 சதவீதம் பேரும் கேரளாவில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் கேரளாவில் தான் வசிக்கிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 67.3 சதவீதம் பேரும் பெண்கள் 70.9 சதவீதம் பேரும் வசித்தனர். தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.