வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா, ஆளும் அவமி லீக் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஆளும் அவமி லீக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷேக் ஹசினாவை ஒரு மனதாக கட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
தேர்வுக்கு பின்னர் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஹசினா, “ஏழ்மை இல்லாத நாடாக வங்க தேசம் உருவாகும் லட்சியம் நிறைவேறும் வரை அவமி லீக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
கட்சி நடவடிக்கையில் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, கட்சியை வலிமைப்படுத்த தலைவராக தேர்வாக விரும்புகிறேன்” என்றார்.
முன்னதாக அவாமி லீக் கட்சி கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முறையாக் ஆட்சியை பிடித்தது. பின்னர் ஜனவரி 2014-ல் நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.