பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்!

407 0

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 8 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் கடந்த 14.08.2019 புதன்கிழமை பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக வள்ளிபுனத்தில் படுகொலைசெய்யப்பட்ட 61 மாணவிகளதும் தோழர் செங்கொடியினதும் நிழல் படங்களுக்கு 26.12.2019 அன்று நெடுந்தீவுக்கடலில் இடம்பெற்ற மோதலில்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் அவர்களும் 26.06.1989 அன்று வவுனியா ஓமந்தைப் பகுதியில் இந்தியப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரூபனின் சகோதரி அவர்களும் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தை தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)