
மாரவில பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது பிரபலமான அரசியல் கட்சி எனவும் அது தொடர்ந்தும் தனது கௌரவத்தை காத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சில நேரம் எழும், ஒரு சில நேரம் வீழ்ச்சியடையும் கட்சியாக இருந்தாலும் அதனை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டை சூறையாடி அழித்தாகவும், ஐக்கிய தேசிய கட்சியினால் அழிக்கப்பட்ட நாட்டை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே எப்போதும் கட்டியெழுப்பியதாகவும் முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.