பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது! சம்பந்தன்

300 0

sampanthan_6பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸ் உத்தரவினை மீறி பயணம் செய்த காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தினால் நாட்டு மக்களுக்கு என்ன நேரும். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் பற்றி அறிந்து கொண்ட போது நானும் ஜனாதிபதியும் திருகோணமலையில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தோம். இந்த சம்பவம் பற்றி விசேட விசாரணைகளை நடத்த அப்போதே ஜனாதிபதி தீர்மானித்தார்.

மாணவர்கள் பொலிஸ் உத்தரவினை மீறிச் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாது சட்டத்தை அமுல்படுத்தியிருக்கலாம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.