ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி

451 0

ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதர் என்றும் அவர் சிறு வயதில் இருந்து அளித்து வரும் பாசம் மாறவே இல்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

ரக்‌ஷா பந்தன் விழாவையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்காகாந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தி, உலகின் சிறந்த சகோதர். அவர் சிறு வயதில் இருந்து அளித்து வரும் பாசம் மாறவே இல்லை என்று கூறி உள்ளார். மேலும் சகோதரர் அன்பை வெளிபடுத்தும் சிறுவர்-சிறுமி படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 சிறுவர்-சிறுமி படத்தை வெளியிட்டுள்ள பிரியங்கா

கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் உத்தரபிரதேசத்துக்கு சென்ற போது கான்பூர் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டனர்.

அப்போது ராகுல்காந்தி கூறும்போது, “பிரியங்காவை கான்பூர் விமான நிலையத்தில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் பிரசார கூட்டத்துக்கு செல்கிறோம்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, “நான் பெரிய விமானத்தில் செல்கிறேன். பின்னர் சிறிய ஹெலிகாப்டரில் செல்கிறேன். பிரியங்கா சிறிய விமானத்திலும், பெரிய ஹெலிகாப்டரிலும் செல்கிறார்” என்று கிண்டல் செய்தார்.

இதைகேட்ட பிரியங்கா சிரித்தபடி அது உண்மை இல்லை என்றார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.