சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!

307 0

eu_flag_spifசிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.

ஜிஎஸ்பி. வரிச்சலுகை அடுத்த வருடம் மார்ச்ச மாதமளவில் சிறீலங்காவுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இருப்பினும், கடந்த வருட அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர் முன்னெடுக்கப்படும் அரசியல், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலேயே ஜிஎஸ்பி வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.