பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் குறித்த பெண்கள் தேயிலை பறித்துக்கொண்டிருந்த வேளை, தேயிலை மரத்துக்கு அடியில் இருந்த குளவிகூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்குள்ளான பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான ஏழு பெண் தொழிலாளர்களும் தற்போது பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.