கோட்டாவை ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரிக்காது – பிமல்

384 0

கோட்டாபய ராஜபக்ஷ அல்லது வேறு எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் எண்ணம் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை என பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு பதிலளித்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசியல் கட்சியை வழிநடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் அவருக்கு இல்லை என்றும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பந்துப்பட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.