ஜனாதிபதியின் வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய நீதிபதி குழு நியமனம்

338 0

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவ செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியுள்ளனர்.

குறித்த நீதிபதிகள் குழுவினர் 23 ஆம் திகதி ஜனாதிபதியிக் வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளனர்.

குறித்த வேண்டுகோள் தொடர்பில் எழுத்து மூல ஆவணங்கள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்க நடவடிக்கை எடுக்கமாறு உயர்நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.