கஞ்சா தொகையுடன் பளையில் ஒருவர் கைது

380 0

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி அம்மன் கோயில் பகுதியில் வைத்து 8 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய உடுத்துறை பகுதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கஞ்சா தொகையினை வேறு ஒரு நபருக்கு பரிமாற்றம் செய்ய எடுத்து வந்த போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.