கொழும்பு, மாதம்பிட்டிய பகுதியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டவரில் ஒருவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இருந்தே குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் 39 வயதுடைய ஆனமாலு என அழைக்கப்படும் ரங்க என்பவர் பாதாள உலகக்குழு உறுப்பினரும் மற்றும் 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.