பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள முடியும் என மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியும் அவரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றவேளை    வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு நிலவரத்தை கையாள்வதற்கான திறனும் அனுபவமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உள்ளது ஆகவே இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

உங்களால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை கையாள்வதற்கான திறமை உள்ளதுஎன சுமங்கள தேரர் கோத்தபாயா ராஜபக்சவிடம்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குகின்றோம் எனவும் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.