கொழும்பில் நேற்று (13) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியில் உள்ளவர்களால் உருவாக்கப்படும் அரசியல் யாப்பு மக்களை பாதுகாப்பதற்கல்ல எனவும் மாறாக ஆட்சியில் உள்ளவர்களை பாதுகாப்பதற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவதுடன் அடுத்தாக தெரிவாகும் ஜனாதிபதிக்கு, இன்றுள்ள அமைச்சரவை கூட இல்லாது போகும் எனவும் அவர் கூறினார்.
19 ஆம் திருத்தத்திற்கு அமைய தற்போதுள்ள ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களையும் இல்லாது போகும் என்பதோடு, அதனால் பொது மக்கள் முன் சென்று 225 பேரும் நிராகரிக்கப்படுவதாகவும், எனவே தற்போதுள்ள யாப்பு புரட்சிமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் தான் எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தை கோருவதன் ஊடாக சிலவேளை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் நாகாகந்த கொடிதுவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.