வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார். இப்போதே கட்சியின் அதிக பெரும்பான்மை ஆதரவு தெரிவிக்கும் நபர் குறித்தே அக்கறை செலுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
கட்சியின் ஏகமனதான நிலைப்பாடுகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நிலைப்பாட்டை புறக்கணித்து மாற்று அணியினை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கட்சியின் ஏகோபித்த நிலைப்பாடாக உள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவம் இன்னமும் எந்தவித கருத்துக்களும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கபீர் ஹசீமிடம் இது குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.