திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள்

361 0

2019ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபட்ட ஆளணி தெரிவின் போது திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பீ. சந்திரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது பற்களில் ஏற்படும் குளறுபடிகளை நீக்குவதற்காக பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களை கோரி அவற்றிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு இரண்டு நாட்கள் வதிவிட பயிற்சி வழங்கி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பெரும் தொகை நிதியும் செலவு செய்யப்பட்டதுடன் இவ்வருடம் இவை கவனத்தில் கொள்ளப்படாமல் இவர்களின் அடிவருடிகள் மட்டும் கவனத்திற்கொண்டு கடமைகள் வழங்கப்பட்டுள்ளது இது நிதி பிரமாணத்தின் படி குற்றம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தரம் 1 தரம் 2 1 ஆகியோரை நிர்வாக சேவைக்கு பயன்படுத்த முடியுமானால் இங்கு தரம் 3- 1 தரம் 2- 1 ஆகியோர் மேலதிக நோக்குனர்களாக, பிரதம நோக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் பயிற்சி பெறாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிபர் தரத்தில் உள்ள பயிற்சி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் திருகோணமலை வளையத்தில் முஸ்லிம் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக உயர்தர பரீட்சையின் போது புறக்கணிக்கப்படுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.