வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒரு மாத காலம் கிராம மட்டத்தில் ஈடுபடுத்தி பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
விசேடமாக அரசியல் கட்சி, தொழிற்சங்கங்கள், உள்ளிட்ட விசேட பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனைகளும் இதற்காகப் பெறப்பட்டு, இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான செலவு ஆயிரத்து 819 பில்லியன் ரூபாவாக அமைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.