தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

353 0

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றாா்.

2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­திட்ட பின்­னர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மாலை, ஏ-9 நெடுஞ்­சாலை மூடப்­பட்­டது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது ஆட்­லறி செல் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. நான்கு ஆண்டு கால

சமா­தா­னம் முறி­வ­டைந்து மீண்­டும் போர் ஆரம்­ப­மா­கி­யது. இதுவே இறு­திப் போருக்கு வழி­வ­குத்­ துச் சென்­றது. அப்­போ­தைய அரச தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்­ச­வும், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் செயற்­பட்­டி­ருந்­த­னர்.

இந்த நிலையில் அதே நாளில் கோத்தபாய நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.